= கே. ரவிச்சந்திரன், குரோம்பேட்டை.
எனது மனைவி கேன்சரால் இறந்துவிட்டார். எனக்குப் பிள்ளைகள் இல்லை. மறுமணம் நடக்க வாய்ப் புண்டா? ஆசிரியராகப் பணி புரிகிறேன். பென்ஷன் இல்லை. ஏதாவது தொழில் செய்யலாமா? எந்தவகை யான தொழில்? உடன்பிறந்த வர்களால் உதவி உண்டா?
துலா ராசி, சித்திரை நட்சத்திரம், ரிஷப லக்னம். 56 வயது நடக்கிறது. லக்னத் துக்கு 7-ஆமிடம் மனைவி ஸ்தானம். அதை ரிஷப குருவும், கும்பச் சனியும் பார்ப்பதால் மறுமணமுண்டு. சனி பார்த்ததால் களஸ்திரதோஷம். கணவனைப் பிரிந்தவர் அல்லது இழந்தவரை மறுமணம் செய்யலாம். பெரும்பாலும் பள்ளி ஆசிரியையாக அமையலாம். கோவிலில் அல்லது பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம். அப்படி நடக்கும் போது 1, 3, 6 தேதிகள் உத்தமம். 4, 7, 8 தேதிகள் ஆகாது. மகாபலிபுரம் சாலையில் நித்திய கல்யாணப் பெருமாள் கோவிலில் சென்று வேண்டிக்கொள்ளவும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jothidamanswer_58.jpg)
= எம்.பி. ராசன், திருநெல்வேலி.
எனக்கும் மனைவிக்கும் சுமுகமான உறவில்லை. நான் காணும் கனவுகள் பலித்துவிடுகின்றன. வேலையில் பதவி உயர்வு கிடைக்குமா? (ஐ.டி. துறையில் வேலை).
ரிஷப லக்னம், பூச நட்சத்திரம், கடக ராசி. பழனிராசனுக்கு ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னம்! ஆண் கடக லக்னம்; பெண் கடக ராசி. அதனால் திருமணம் நடந்தது. அத்துடன் பெண் சரண்யா ரிஷப லக்னம்; ஆண் ரிஷப ராசி. அதனால் பிரிவு, பிளவுக்கு இடமில்லை. அதேசமயம் சரண்யா ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ல் சனி. பழனிராசனுக்கு ராசிக்கு 7-ல் செவ்வாய்; அதற்கு சனி பார்வை. வாழ்நாள் முழுவதும் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஏட்டிக்குப் போட்டியான வாக்குவாதமும் நிலவும். நீரடித்து நீர் விலகாது என்ற முறையில் பிரிவு ஏற்படாது. ரோகிணி பாம்பு; பூசம் ஆடு. பாம்பு கொத்தும்; ஆடு முட்டும். நாமக்கல்வழி மோகனூர் சென்று சம்மோகன கிருஷ்ணரை பூஜைசெய்தால் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமையும் அன்யோன்ய உறவும் உண்டாகும். தம்பதி சகிதமாகப் போகவேண்டும்.
= து. செல்வராஜு, விழுப்புரம்.
சனி தசை நான்காவது தசையாக வந்தால் ஜாதகருக்கு மரண பயமோ- மரணத்துக்கு ஒப்பான கண்டமோ வருமென்றும், அதற்குப் பரிகாரமாக அவர் பெயரில் இருக்கும் சொத்துகளை மற்றவருக்கு விற்றுவிடலாம் அல்லது பிள்ளைகள் பேரில் மாற்றி எழுதலாமென்றும் சில ஜோதிடர்கள் கருத்து கூறுவது உண்மையா?
உண்மைதான். மாற்றம் செய்வது நல்லதுதான். அதேசமயம் ஏதாவது ஒருவகையில் ஆதாரம், பிடிமானம் வைத்துக்கொள்வது நல்லது.
= வை. செல்வராஜ், ஒட்டன்சத்திரம்.
வினோத் ராஜுக்கு (வயது 33) திருமணம் எப்போது நடக்கும்?
மீன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். ராசி, லக்னத்தில் ராகு, 7-ல் கேது நிற்பதும், களஸ்திரகாரகன் சனி பார்ப்பதும் தோஷம். 35 வயது முடிந்தபிறகுதான் திருமண யோகம். காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல் 99942 74067) காமோ கர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் செய்தால் 2021 தை மாதம் திருமணம் முடிந்துவிடும். இல்லா விட்டால் 35 வயதுவரை காத்திருக்க வேண்டும். அந்நிய சம்பந்தம். நல்ல மண வாழ்க்கை அமையும். சிம்ம ராசி, துலா ராசிப் பெண் வேண்டாம். திருவாதிரை, உத்திராடம், பூரட்டாதி, அவிட்ட நட்சத்திரமும் பொருந்தாது.
= புஷ்பா-
எனக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் சுரேஷ்; மருமகள் உஷா. சுரேஷுக்கு 38 வயது முடிந்து 39 ஆரம்பம். புதன் தசையில் ராகு புக்தி 28-2-2021 வரை நடக்கும். கடந்த 8-6-2017-ல் திருமணம் நடந்தது. மூன்று நாளில் எந்த காரணமும் சொல்லாமல் யு.எஸ்.ஏ சென்று விட்டான். இருவரும் இணைய வாய்ப்புள்ளதா? இளையமகன் சந்தோஷுக்கு 34 வயது. திருமணம் நெருங்கிவந்து நின்று விடுகிறது. எப்பொழுது நடக்கும்?
பொதுவாக 4, 7, 8 தேதிகளில் திருமணம் நடந்தால் சிக்கல்தான். இணைந்து வாழமுடியாது. நாமக்கல் அருகில் மோகனூர் சென்று சம்மோஹன கிருஷ்ணனுக்கு பூஜைசெய்துவந்தால் குடும்பம் ஒன்றுசேர வாய்ப்புண்டு. அப்படி சேரும் காலம் 8-ஆம் தேதி கட்டிய மாங்கல்யத்தைக் கழற்றி உண்டியலில் செலுத்தலாம். அல்லது அதை அழித்து புதுமாங்கல்யம் செய்து 1, 3, 6 தேதிகள் வரும் நாளில் மறுபடி அணியவேண்டும். (அன்று இருவருக்கும் சந்திராஷ்டமம் இருக்கக்கூடாது.) மகன் வரமுடியாவிட்டால் மருமகள் மட்டும் சென்று மேற்படி பரிகாரம் செய்து அர்ச்சகரிடம் வாங்கி அணிந்து கொள்ளலாம். இளையமகன் சந்தோஷ் திருமணம் நிறைவேற காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் காமோகர்ஷண ஹோமமும் கந்தவர்ராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். (செல்: 99942 74067).
= ரேவதி, மதுரை.
எனக்கு ஐந்து வருடமாக வயிற்றுபுண் (அல்சர்) உள்ளது. ரத்த அழுத்தமும் உள்ளது. சில நேரங்களில் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது. தற்போது வாயிலிருந்தும் ரத்தம் வந்தது. மரணம் ஏற்படுமோ என்ற பயம் வருகிறது. கண்டம் உண்டா?
சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். குடும்ப ஜாதகத்துடன் நேரில் வரவும். தொலைபேசியில் முன்பதிவு செய்யவும்.
= எஸ். சிவப்பிரகாசம், புதுச்சேரி.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? 40 வயது நெருங்கிவிட்டது.
ஜாதகத்தில் களஸ்திரதோஷம், புத்திரதோஷம் இருப்பதால் திருமணம் தடையாகிறது. 2020 டிசம்பர் இறுதியில் சனிப்பெயர்ச்சி வருகிறது. அதன்பிறகு திருமண முயற்சிகள் கைகூடும். நிச்சயம் செய்யும் தேதி அல்லது திருமணம் செய்யும் தேதி 1, 3, 6 வரவேண்டும்; உத்தமம். கண்டிப்பாக 4, 7, 8-ஆம் தேதிகள் கூடாது. தேதியும் சரி; வருடம், மாதம், தேதி எல்லாம் கூட்டிவரும் எண்ணும் 4, 7, 8 கூடாது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/jothidamanswer-t_0.jpg)